பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 29 Jun 2025 8:49 AM IST (Updated: 29 Jun 2025 12:23 PM IST)
t-max-icont-min-icon

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் முல்தான் நகர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் மக்கள் வழக்கம்போல் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பூமி குலுங்கி நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கின. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், ‛‛பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.2 என பதிவாகி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால், உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவல்களும் தற்போது வரை இல்லை. இந்த நிலநடுக்கம் முல்தானுக்கு மேற்கே சுமார் 149 கிலோமீட்டர் (92.5 மைல்) தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டு இருந்தது என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

1 More update

Next Story