உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 3 பேர் பலி

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 374வது நாளாக போர் நீடித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 3 பேர் பலி
Published on

கீவ்,

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 374வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நேற்று இரவு டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள், ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 37 பேர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com