உக்ரைன் மீது ரஷியா மீண்டும் டிரோன் தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு


உக்ரைன் மீது ரஷியா மீண்டும் டிரோன் தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு
x

உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

கீவ்,

உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் ரஷிய படைத்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 41 போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் 6 மாகாணங்களை குறிவைத்து டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், இன்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story