உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் - 4 பேர் பலி

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்து வருகிறது
கீவ்,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ், டினிபிரோபெட்ரோசோவ் நகரங்களை குறிவைத்து நேற்று இரவு ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
Related Tags :
Next Story






