ஜப்பான் கடற்பகுதியில் பறந்த ரஷிய போர் விமானங்கள்


ஜப்பான் கடற்பகுதியில் பறந்த ரஷிய போர் விமானங்கள்
x

ரஷிய விமானங்கள் இதேபோல் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்தின.

டோக்கியோ,

ஜப்பானின் ஓகோட்ஸ்க் கடற்பகுதியில் டுபோலேவ்-95 என்ற ரஷிய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலாக அந்த குண்டுவீச்சு விமானங்கள் வானில் வட்டமிட்டன. ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமும் ரஷிய விமானங்கள் இதேபோல் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இதனால் இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

1 More update

Next Story