மகளிர் உலகக்கோப்பை: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
இந்நிலையில், லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் மோதுகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள இலங்கையும், கடைசி இடத்தில் (8வது) உள்ள பாகிஸ்தானும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






