இலங்கை பிரதமர் நாளை இந்தியா வருகை

இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஹரிணி அமரசூர்யா இந்தியாவிற்கு வர உள்ளார்.
இலங்கை பிரதமர் நாளை இந்தியா வருகை
Published on

புதுடெல்லி,

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக நாளை(16-ந்தேதி) இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இலங்கையின் பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு அவர் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தரும் ஹரிணி அமரசூர்யா, இங்கு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து இருநாட்டு நலன்கள் சார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். இலங்கை பிரதமரின் வருகை, இந்தியா-இலங்கை இடையே உள்ள ஆழமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் என்றும், இந்தியாவின் 'மகாசாகர் தொலைநோக்குப் பார்வை' மற்றும் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' ஆகிய கொள்கைகளை வலுப்படுத்தும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com