டிரம்பை பாராட்டிய கனடா பிரதமர் மார்க் கார்னி

இருநாட்டு உறவை வலுப்படுத்துவது, இஸ்ரேல் - காசா மோதல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து டிரம்ப் - மார்க் கார்னி விவாதித்தனர்.
வாஷிங்டன்,
கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு சென்றார். வெள்ளை மாளிகையில் கனடா பிரதமர் மார்க் கார்னியை ஜனாதிபதி டிரம்ப் கை குலுக்கி வரவேற்றார். கடந்த ஏப்ரல் மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து வெள்ளை மாளிகைக்கு 2-வது முறையாக மார்க் கார்னி சென்றுள்ளார்.
இருநாட்டு உறவை வலுப்படுத்துவது, இஸ்ரேல் - காசா மோதல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர் மார்க் கார்னி செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்ட டிரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சியை நாங்கள் ஆதரிப்போம். அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளையும் செய்வோம். இந்தியா - பாகிஸ்தான் மற்றும் அசர்பைஜாந் அர்மேனியா ஆகிய நாடுகள் இடையே அமைதியை நிலை நிறுத்த டிரம்ப் உதவினார். மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி டிரம்ப்.
இவ்வாறு அவர் கூறினார்.






