மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரானை நோக்கி செல்லும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை


மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரானை நோக்கி செல்லும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை
x

என்னை கொல்ல முயற்சித்தால் ஈரான் முற்றிலும் அழிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்கா - ஈரான் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து உள்ளது. ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.போராட்டத்தை ஒடுக்க. அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இதில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.இதற்கிடையே ஈரானில் போராட்டக்கா ரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்தார்.

மேலும் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே என்னை கொல்ல முயற்சித்தால் ஈரான் முற்றிலும் அழிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவை துடைத்தெறிவோம் என்று ஈரான் தெரிவித்தது.

இந்தநிலையில் ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படை செல்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப்பொருளாதர மன்ற கூட்டத்தில் பங்கேற்ற டிரம்ப் நாடு திரும்பினார்.

அவர் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எங்களுடைய பிரமாண்டமான கடற்படை ஒன்று ஈரானை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வளைகுடாவை நோக்கி அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் படையான ஆர்மடா சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் ஈரானை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப் போம். எங்களிடம் அந்த திசையில் நிறைய கப்பல்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும், ஈரானை நோக்கி ஒரு பெரிய படை எங்களிடம் உள்ளது. அதே வேளையில் எங்களின் படையை பயன்படுத்த வேண்டியிருக்காது என்று நம்புகிறேன். ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலும் இளைஞர்கள் உள்பட 837 பேரை தூக்கிலிடத் திட்ட மிட்டிருந்தனர். அவர்களை தூக்கிலிட்டால் இதுவரை காணாத வகையில் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என நான் எச்சரித்தேன். ஈரானில் அணு திட்டங்களை அழித்ததைவிட பயங்கரமாக இருக்கும் எனத் தெரிவித்தேன். இதன் எதிரொலியாக தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரான் அருகே அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு வருவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை எற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story