கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு - டிரம்ப் அறிவிப்பு

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை விமர்சித்து கனடா அரசு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சில மாதங்களுக்கு முன்பு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில் அண்டை நாடான கனடாவில் இருந்து அமெரிக்கா வுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை விதித்தார்.
இதனையடுத்து, அமெரிக்கா -கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தன.இதற்கிடையே டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை விமர்சித்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரோனல்டு ரிகன், வரி விதிப்பால் அமெரிக்கா பாதிக்கப்படும்'என கூறும் வீடியோ இடம் பெற்றிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப், கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களும் முடிவுக்கு வருவதாக அறிவித்தார்.
Related Tags :
Next Story






