இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி: கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா

9ம் தேதிக்குப்பின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது டிரம்ப் சரமாரியாக வரி விதித்தார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தார். இந்திய பொருட்கள் மீது 27 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். அந்த காலக்கெடு வரும் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. 9ம் தேதிக்குப்பின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.






