உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா - ரஷியா அதிகாரிகள் பேச்சுவார்த்தை


உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா - ரஷியா அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்து வருகிறது.

வாஷிங்டன்,

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ரஷிய அதிபர் புதினின் சிறப்பு தூதர் கிரில் டிமிட்ரிவ் , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விக்ட்ஆப் ஆகிய இருவரும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் டிரம்ப்பின் மருமகன் ஜெரட் குஷ்னரும் பங்கேற்றார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story