சீனா-நேபாள எல்லையில் நிலச்சரிவு: 17 பேர் மாயம்- மீட்பு பணிகள் தீவிரம்


சீனா-நேபாள எல்லையில் நிலச்சரிவு: 17 பேர் மாயம்- மீட்பு பணிகள் தீவிரம்
x

சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளனர்.

பெய்ஜிங்,

சீனா-நேபாள எல்லைப் பகுதியில் கைரோங் என்ற நகரம் உள்ளது. இந்த நகரம் தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியாகும். மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரத்தில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது. இதையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 17 பேர் மாயமாகினர். இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் கூறியதாவது:

இன்று அதிகாலையில் கைரோங் நகரில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 17 பேரை காணவில்லை. இந்த சம்பவத்தில் சீனாவை சேர்ந்த 11 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த 6 கட்டுமானத் தொழிலாளர்களும் மாயமாகி உள்ளனர். காணாமல் போனவர்கள் சேற்றில் சிக்கி இருக்கலாம். ஆகவே அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்று கூறினர்.

எனினும், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதியில் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. லஹுமு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story