நாயை தேடி வந்த இடத்தில்... டீன்-ஏஜ் சிறுமி பலாத்காரம், கொலை; 24 ஆண்டுகளுக்கு பின் அதிரடி சம்பவம்

சிறுமி பெய்னியின் கைகளை கட்டி போட்டு விட்டு, கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.
நாயை தேடி வந்த இடத்தில்... டீன்-ஏஜ் சிறுமி பலாத்காரம், கொலை; 24 ஆண்டுகளுக்கு பின் அதிரடி சம்பவம்
Published on

இண்டியானா,

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் டேல் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டேசி பெய்னி. 2001-ம் ஆண்டு ஜூலையில் அவருக்கு 15 வயது இருக்கும்போது, ராய் லீ வார்டு என்பவர் பெய்னியின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.

அப்போது ராய் லீக்கு வயது 29. இந்நிலையில், பெய்னி கதவை திறந்ததும் தன்னுடைய நாயை காணவில்லை. அதனை தேடி வந்தேன் என கூறி வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டியுள்ளார். சிறுமி பெய்னியின் கைகளை கட்டி போட்டு விட்டு, கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன்பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த திடீர் தாக்குதலில் அதிர்ச்சியடைந்த சிறுமி பலியானார். இந்த வழக்கில் ராய் லீக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. எனினும், 24 ஆண்டுகளாக சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளார்.

இறுதியாக கடந்த செப்டம்பரில், அவருக்கு இரக்கம் காட்ட கவர்னர் மைக் பிரான் மறுத்து விட்டார். இதன்படி, கடந்த 10-ந்தேதி 53 வயதில் விஷ ஊசி செலுத்தி ராய் லீக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பு, ஹாம்பர்கர், பிரெஞ்சு பிரை, வெண்ணெய் தடவிய அவித்த உருளைக்கிழங்கு, 12 பொரித்த இறால்கள், இனிப்பு உருளைக்கிழங்கு ஒன்று, சிக்கன் ஆல்பிரெடோ, ரொட்டி துண்டுகள் மற்றும் பிற வகையான உணவு பொருட்களை ஆர்டர் செய்து ராய் லீ சாப்பிட்டுள்ளார்.

பெய்னியின் தந்தை அந்த வீட்டிலேயே வசித்து வருகிறார். அவருடைய தாயார் ஜூலி வினிங்கர் கூறும்போது, பெய்னி படிக்கும்போதே வேலை செய்து பணம் ஈட்டி வந்தவர். மிக குறைந்த காலம் வாழ்ந்தபோதும் அவளின் வாழ்வு அர்த்தமுள்ள ஒன்றாக இருந்தது. பெய்னியின் சிரிப்பை மீண்டும் நாங்கள் பார்க்கமாட்டோம். அவளின் குரலை கேட்கமாட்டோம். அவள் முழு பெண்ணாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் இனி அவளை வளர்ந்த பெண்ணாக நாங்கள் ஒருபோதும் பார்க்க முடியாது என்று வேதனையுடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com