பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நடிகை நமீதாவுக்கு அனுமதி மறுப்பு


பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நடிகை நமீதாவுக்கு அனுமதி மறுப்பு
x

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகை நமீதா சற்று தாமதமாக வந்ததாக தெரிகிறது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தில் பா.ஜனதா சார்பில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்றதால் மைதான பகுதி முழுவதும் போலீஸ் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது. அடையாள அட்டையை சரி பார்த்த பின்னரே அனைவரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி பொது கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு பா.ஜனதா வேட்பாளர்கள் பொதுக்கூட்ட மேடைக்கு வந்து விட்டனர். மோடி வரும் நேரம் நெருங்க நெருங்க போலீசார் தங்களது பாதுகாப்பை தீவிரப்படுத்தினர். இந்தநிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகை நமீதா சற்று தாமதமாக வந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், நமீதாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து நடிகை நமீதா பா.ஜனதா கட்சியின் தலைமை இடத்திற்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்து நடிகை நமீதா பொதுக்கூட்ட அரங்குக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story