ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
ஜம்மு-காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதிக்கு மே 7-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின.
அதேவேளையில் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தேர்தலை ஒத்திவைக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.
இந்த நிலையில் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ந் தேதிக்கு பதிலாக மே 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் மியான் அல்தாப் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி உள்பட 21 வேட்பாளர்கள் இந்த தொகுதியில் களத்தில் உள்ளனர்.