வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை - செல்வப்பெருந்தகை


வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை  - செல்வப்பெருந்தகை
x

வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கி உள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழகத்தை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள ஒன்பதாவது முறையாக வருகை புரிந்திருக்கிறார். ஆனால், 100 முறை தமிழகத்திற்கு வந்தாலும் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கோவை பொதுக்கூட்ட மேடையில் நிலவிய உணர்ச்சிபூர்வமான பரஸ்பர நட்பு, தமிழக மக்களிடம் காட்டிய உண்மையான அன்பிற்கு இணையாக நரேந்திர மோடியின் பகல் வேஷம் எடுபடாது என்பதை அனைவரும் அறிவார்கள். இதன்மூலம் தலைவர் ராகுல் காந்தி தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story