நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்


நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
x

கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ் பாண்டியன், முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சாமிநாதன் ஆகியோர் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், கழக விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் கு. ராஜமாணிக்கம் ஆகியோர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் , முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதிக்கும் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி, தேர்தல் பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story