ஆந்திராவின் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டி


ஆந்திராவின் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டி
x
தினத்தந்தி 2 April 2024 10:41 AM GMT (Updated: 2 April 2024 10:44 AM GMT)

ஆந்திர மாநிலத்திற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

அமராவதி,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர். பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

இதில், முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார். காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார்.

பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர். ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 15-ம் தேதி முதல் தொடங்குகிறது.


Next Story