முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்


முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்
x

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திண்டிவனம்,

தமிழக சட்டத்துறை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சி.வி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் வாட்ஸ்-அப் காலில் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் சி.வி.சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, நானும் வன்னியர் தான். ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த நவநீதன் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இது குறித்து சி.வி. சண்முகத்தின் உதவியாளர் ராஜாராம் ரோசனை போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.வி.சண்முகத்தை மிரட்டிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story