'40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்' - கனிமொழி பேச்சு


40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - கனிமொழி பேச்சு
x

தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில் உடன்குடியில் நடைபெற்ற திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய 3 தொகுதிகள் அடங்கிய செயல்வீரர்கள் கூட்டத்தில் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தமிழகத்தில் பேரிடர் நிகழ்ந்தபோது ஒரு முறை கூட பிரதர் மோடி வந்து பார்க்கவில்லை. வியாபாரிகள் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், என பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டபோது வரவில்லை. ஆனால் தேர்தலுக்காக பல முறை வந்து சென்று விட்டார். இன்னும் வருவதாக சொல்லி உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தங்களை எதிர்த்தவர்களை பா.ஜ.க. கைது செய்து மிரட்டி வருகிறது. தமிழக மக்களை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது. வரும் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்."

இவ்வாறு கனிமொழி பேசினார்.


Next Story