வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துங்கள்: தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாகு கடிதம்


வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துங்கள்: தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாகு கடிதம்
x
தினத்தந்தி 5 April 2024 6:10 AM GMT (Updated: 5 April 2024 6:16 AM GMT)

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;

"* மக்களவை தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

* வாக்குச்சாவடிகளில் 15க்கு15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும்.

* வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை, சாய்வு தளம், மின் இணைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டும்.

* குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story