பா.ஜனதாவில் இருந்து விலகினார் பிரேந்தர் சிங்: இன்று காங்கிரசில் சேருகிறார்
பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.
சண்டிகார்,
முன்னாள் மத்திய மந்திரி பிரேந்தர் சிங், பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவருடைய மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரேம லதாவும் பா.ஜனதாவில் இருந்து விலகினார். இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரசில் சேரப்போவதாக பிரேந்தர் சிங் கூறினார்.
40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரேந்தர் சிங், 10 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருடைய மகன் பிரிஜேந்தர் சிங் ஒரு மாதத்துக்கு முன்பு பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.
Related Tags :
Next Story