மீனவர்கள் இனி தி.மு.க. காங்கிரசை நம்ப மாட்டார்கள் - ஜி.கே.வாசன் பேட்டி


மீனவர்கள் இனி  தி.மு.க. காங்கிரசை நம்ப மாட்டார்கள் - ஜி.கே.வாசன் பேட்டி
x

மீனவர்களை இனிமேல் ஏமாற்ற தி.மு.க., காங்கிரஸ் நினைக்க வேண்டாம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னை,

விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

கச்சத்தீவு பிரச்னையில் யாரும் யாரையும் மாறி மாறி குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இது ஒரு வரலாற்று பிழை. வரலாற்றிலே இந்த பிழை இடம்பெற்றிருக்கிறது. அன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த முடிவுக்கு தி.மு.க. உடந்தையாக செயல்பட்டது என்ற முடிவை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. மீனவர்கள் இனி ஒருபோதும் திமுக, காங்கிரசை நம்ப மாட்டார்கள்.மீனவர்களை இனிமேல் ஏமாற்ற தி.மு.க., காங்கிரஸ் நினைக்க வேண்டாம். அவர்கள் ஏமாளிகள் அல்ல என தெரிவித்தார்.


Next Story