நாட்டின் தலைநகரை எப்படி மாற்ற முடியும்? கமல்ஹாசனுக்கு அண்ணாமலை கேள்வி


நாட்டின் தலைநகரை எப்படி மாற்ற முடியும்? கமல்ஹாசனுக்கு அண்ணாமலை கேள்வி
x

பா.ஜ.க.வின் கற்பனைப்படி நாக்பூர்தான் இந்தியாவின் தலைநகராக இருக்க வேண்டுமென ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேசியிருந்தார்

கோவை,

பாஜகவின் கற்பனைப்படி நாக்பூர் தான் இந்தியாவின் தலைநகராக இருக்க வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிரசாரத்தில் பேசியிருந்தார். இந்த நிலையில், கமல்ஹாசனின் பேச்சை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியதாவது;

"கமல்ஹாசனை நல்ல மனநிலை மருத்துவமனைக்கு சென்று சுயநினைவோட தான் இருக்கிறாரா என்று மருத்துவ ஆலோசனை பெற சொல்லுங்கள். கமல்ஹாசன் நல்ல மனநல மருத்துவரிடம் தனது மூளையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும்? இந்தியாவின் குளிர்கால தலைநகரை, கோடை கால தலைநகரை சென்னைக்கு கொண்டுவாருங்கள் என்று கூறினால், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். தி.முகவுக்கு தனது கட்சியை ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக விற்பதற்காக இப்படி கூவ வேண்டுமென்று நினைக்கிறாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story