வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்


வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெறும். ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர்கள் பெயர் மட்டும் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே இந்த தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், சிதம்பரம், நாகை, தஞ்சை, தென்காசி ஆகிய 9 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 15 மற்றும் அதற்கு கீழ் உள்ளது. எனவே இந்த 9 தொகுதிகளில் மட்டும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது.

அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story