கலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை


கலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
x

தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை பெரம்பூர் மேம்பாலம் அருகே வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் சென்றுகொண்டிருந்தபோது அந்த பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் பணமோ, பொருளோ ஏதுவும் காரில் இல்லை. முழுமையான சோதனை முடிந்த பின்னர் கலாநிதி வீராசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

1 More update

Next Story