மணிப்பூர்: 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்


மணிப்பூர்: 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்
x

Image Courtesy : PTI

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இம்பால்,

மணிப்பூரில் மொத்தமுள்ள 2 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் உள்மணிப்பூர் மற்றும் வெளிமணிப்பூரில் உள்ள 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும், வெளிமணிப்பூர் தொகுதியில் மீதமுள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

2 கட்டங்களாக நடந்த தேர்தலின்போது ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. வெளிமணிப்பூரில் 4 வாக்குச்சாவடிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். 2 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சுறுத்தலால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

வாக்குப்பதிவு தடைபட்ட 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கூடுதல் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைய உள்ளது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.


Next Story