மக்களவை தேர்தல்: பஞ்சாப் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை


மக்களவை தேர்தல்: பஞ்சாப் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை
x

Image Courtesy : @INCIndia

வேட்பாளர்களை உறுதி செய்வது குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 'இந்தியா' கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்தாலும், மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்ரித்சர், பத்திண்டா, சங்க்ரூர், பத்கார் சாஹிப், பட்டியாலா மற்றும் ஜலந்தர் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மீதம் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை உறுதி செய்வது குறித்து டெல்லியில் இன்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து விரைவில் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story