மக்களவை தேர்தல்: மேற்கு வங்காளத்தில் இன்று ராஜ்நாத் சிங் பேரணி
மேற்கு வங்காளத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பேரணிகளில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, வரும் 26-ந்தேதி 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று மேற்கு வங்காளத்திற்கு வருகை தரும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பேரணிகளில் கலந்து கொள்ள உள்ளார். இதன்படி முர்ஷிதாபாத், மால்டா உத்தர் மற்றும் டார்ஜிலிங் ஆகிய தொகுதிகளுக்கு ராஜ்நாத் சிங் செல்ல உள்ளார். இதில் டார்ஜிலிங் தொகுதிக்கு வரும் 26-ந்தேதியும், முர்ஷிதாபாத் மற்றும் மால்டா உத்தர் ஆகிய தொகுதிகளுக்கு மே 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story