பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாடும் நம்பாது... மக்களும் நம்பமாட்டார்கள் - அதிஷி விமர்சனம்


பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாடும் நம்பாது... மக்களும் நம்பமாட்டார்கள் - அதிஷி விமர்சனம்
x

10 ஆண்டுகளாக பாஜக அரசு நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

புதுடெல்லி,

பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து டெல்லி மந்திரி அதிஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி, 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என வாக்குறுதி அளித்தார். இன்று அதன் புள்ளி விவரங்களை கூட இந்த அறிக்கையில் கொடுக்கவில்லை. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் அதிரித்துள்ளது. 10 ஆண்டுகளில் பணவீக்கம் 70% அதிகரித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் கூறியிருந்தார். இன்று கட்சியின் அறிக்கையில் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்வதற்காக எதுவும் இல்லை. வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளை பிரதமர் மோடி இன்று வரை சந்திக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை நிறைவேற்றப்படவில்லை. 10 ஆண்டுகளாக பாஜக அரசு நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ளனர். மக்கள் பணவீக்கத்தால் சிரமப்படுகின்றனர்.

குழந்தைகளுக்கு போதிய அரசு பள்ளிகள் இல்லை. குடிமக்களுக்கு சுகாதார வசதி இல்லை. பாஜகவின் இந்த போலியான தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நாடும் நம்பாது... மக்களும் நம்பமாட்டார்கள். மோடியும், பாஜகவும் கடும் தோல்வியை சந்திக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மொத்த செலவு, டெல்லியின் சுகாதார பட்ஜெட்டை விட குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story