நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தினத்தந்தி 20 March 2024 4:29 AM GMT (Updated: 20 March 2024 6:10 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:-

1 ) வட சென்னை - ராயபுரம் ஆர்.மனோ

2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்

3 ) காஞ்சிபுரம் - ராஜசேகர்

4 ) அரக்கோணம் - ஏ.என்.விஜயன்

5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்

6 ) ஆரணி - கஜேந்திரன்

7 ) விழுப்புரம் - பாக்யராஜ்

8 ) சேலம்- விக்னேஷ்

9 ) நாமக்கல் - தமிழ்மணி

10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

11) நாகை - சுர்ஜித் சங்கர்

12) மதுரை - சரவணன்

13) தேனி - வி.டி.நாராயண சாமி

14) கரூர் - கே.ஆர்.என்.தங்கவேல்

15) ராமநாதபுரம் - ஜெயபெருமாள்

16) சிதம்பரம் - சந்திரஹாசன்

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு

அ.தி.மு.க. கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு




Next Story