நாடாளுமன்ற தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்


நாடாளுமன்ற தேர்தல்:  அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 20 March 2024 4:43 PM GMT (Updated: 22 March 2024 5:48 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன்4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் குற்ற வழக்குகள் (நிலுவையில் உள்ளவை மற்றும் தண்டனை பெறப்பட்டவை) உள்ள வேட்பாளர்கள், குற்றவழக்குகள் உள்ள வேட்பாளர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ,வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

குற்றவழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் மேற்படி வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும். மேற்படி விளம்பரங்கள் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தினத்திற்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை மூன்று முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும்.

மேற்காணும் பொருள் தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in. என்ற இணையதள முகவரியில் காணலாம் . என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


Next Story