பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் 3 இடங்களில் பரப்புரை


பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் 3 இடங்களில் பரப்புரை
x

நாளை மாலை 4.00 மணிக்கு அன்புமணி ராமதாஸ் தனது பரப்புரையைத் தொடங்குகிறார்

சென்னை,

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், நாளை (31.03.2024) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்குகிறார். நாளை மாலை 4.00 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெறவுள்ள பரப்புரைக் கூட்டத்தில் தென்சென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் வாக்கு சேகரிக்க உள்ளார்.

நாளை மாலை 6.00 மணிக்கு சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெறும் பரப்புரை நிகழ்ச்சியில் மத்திய சென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வத்தையும், மாலை 7.00 மணிக்கு கொளத்தூரில் நடைபெறும் பரப்புரை நிகழ்ச்சியில் வடசென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் வழக்கறிஞர் பால்கனகராஜை ஆதரித்தும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் உரையாற்றுகிறார்


Next Story