அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்


அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்
x

கோப்புப்படம்

அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

இடாநகர்,

அருணாசல பிரதேசத்தில் கடந்த 19-ந்தேதி நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலுடன், சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

இதில் சில வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மேலும் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதமடைந்திருந்தன.

இவ்வாறு 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. அத்துடன் அந்த வாக்குச்சாவடிகளில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவித்து உள்ளது.


Next Story