டெல்லியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடி பறிமுதல் - 4 பேர் கைது


டெல்லியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடி பறிமுதல் - 4 பேர் கைது
x

டெல்லியில் உரிய ஆவணங்களின்றி 3 கோடி ரூபாய் பணத்துடன் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர்.

அந்த வகையில், டெல்லியில் உரிய ஆவணங்களின்றி 3 கோடி ரூபாய் பணத்துடன் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருகிராமில் இருந்து கொண்டு வரப்பட்ட பணம் கரோல்பாக்கில் உள்ள ஒருவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், இந்த பணம் ஷாஹ்தராவில் உள்ள ஒரு வியாபாரிக்கு சொந்தமானது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பணம் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டுவரப்பட்டதா? யார் மூலம் இந்த பணம் கொடுக்கப்பட்டது? என பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Next Story