என் மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி - அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னை,
தமிழகத்தில் முதல் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. தலைமை இன்று வெளியிட்டுள்ளது.இதில் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
என் மீது நம்பிக்கை வைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் என்னைப் போட்டியிட வைத்ததற்காக அன்புக்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தமிழகத்தை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இது வந்துள்ளது.
மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா , உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் ஆகியோருக்கும் நன்றி . நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வதற்கு தமிழக பா.ஜ.க. பங்களிக்கும். என தெரிவித்துள்ளார்.