வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு?: ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன் - வைரல் வீடியோ


வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு?: ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன் - வைரல் வீடியோ
x

தென்சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் தனது வெற்றி வாய்ப்பு குறித்து கலந்துரையாடினார்.

அதில், என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன் என ரோபோவிடம் கூறினார். எனக்கு உங்களை நன்றாகவே தெரியும். இரண்டு மாநில கவர்னராக இருந்து, தற்போது மக்கள் பணி செய்வதற்காக வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என ரோபோ தெரிவித்தது.

தொடர்ந்து தென்சென்னையில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என தமிழிசை ரோபோவிடம் கேட்டார். அதற்கு ரோபோ கூறுகையில், தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் அதை தரமுடியும் என நம்புகிறார்கள்; நிச்சம் வெற்றி பெறுவீர்கள்.. வாழ்த்துகள்... தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி.. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி.. என்று கூறியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story