வயநாட்டில் யார் வெற்றி பெற்றாலும் 'இந்தியா' கூட்டணி வெற்றிதான் - முத்தரசன் பேட்டி


வயநாட்டில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியா கூட்டணி வெற்றிதான் - முத்தரசன் பேட்டி
x

வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா இருவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வயநாடு,

கேரளாவில் 26-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜக. உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கேரளாவில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இன்று (ஏப்ரல் 4) மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா இருவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்த நிலையில் யார் வெற்றி பெற்றாலும் அது 'இந்தியா' கூட்டணியின் வெற்றிதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியின்போது, "வயநாடு தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் அது 'இந்தியா' கூட்டணியின் வெற்றிதான். ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதற்காக எங்கள் வேட்பாளரை திரும்ப பெற முடியாது" என்று கூறினார்.


Next Story