2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: யுவராஜுக்கு முன் தோனி களமிறங்க காரணம் இதுதான் - சச்சின்


2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: யுவராஜுக்கு முன் தோனி களமிறங்க காரணம் இதுதான் - சச்சின்
x

2011-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை,

கடந்த 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சச்சின், சேவாக் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். மறுபுறம் நிலைத்து விளையாடிய கவுதம் கம்பீருடன் சேர்ந்த கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

குறிப்பாக அந்த தொடரில் அட்டகாசமான பார்மில் இருந்த யுவராஜுக்கு முன்பே களமிறங்கிய அவர் தொடர் முழுவதும் தடுமாறிய போதிலும் இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி 91 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து ஏறக்குறைய 14 வருடங்கள் கழித்து ரசிகர் ஒருவர் சச்சினிடம் கேட்டுள்ளார்.

இது குறித்து ரசிகர் சச்சினிடம், “வணக்கம் சச்சின். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவிக்கு முன்னால் தோனியை களமிறக்கியது உங்கள் ஐடியா என்று விரு (சேவாக்) தெரிவித்திருந்தார். அது உண்மையா, அத்தகைய மாற்றத்திற்குப் பின்னால் என்ன காரணம்?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சச்சின், “தோனியை பேட்டிங் ஆர்டரில் மேலே அனுப்பும் திட்டத்தின் பின்னணியில் 2 காரணங்கள் இருந்தன. எதிரணியின் 2 ஆப் ஸ்பின்னர்களை (முரளிதரன் & சூரஜ் ரந்தீவ்) சமாளிப்பதற்கு இடது -வலது கை பேட்ஸ்மேன்கள் இணை (கம்பீர் - தோனி) தேவைப்பட்டது. அத்துடன் முரளிதரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக (2008 - 2010) விளையாடினார். மேலும் தோனி மூன்று சீசன்களாக வலை பயிற்சியில் அவரை எதிர்கொண்டு விளையாடியிருந்தார்” என்று கூறினார்.

1 More update

Next Story