2-வது டெஸ்ட்: இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவிப்பு


2-வது டெஸ்ட்: இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவிப்பு
x

image courtesy:twitter/@BCCI

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.

நார்த்தம்டான்,

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.

அதற்கு முன்பாக இந்திய ஏ அணி அங்கு சென்று, இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது போட்டி டிராவில் முடிந்தது.

இதனையடுத்து இந்தியா ஏ-இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி நார்த்தம்டானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் அடித்திருந்தது. அன்ஷுல் கம்போஜ் ஒரு ரன்னுடனும், தனுஷ் கோட்டியான் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அபாரமாக விளையாடி சதமடித்த கே.எல்.ராகுல் 116 ரன்களில் கேட்ச் ஆனார். துருவ் ஜுரெல் 52 ரன்களிலும், கருண் நாயர் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா மேற்கொண்டு 32 ரன்கள் அடிப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 89.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா ஏ 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இங்கிலாந்து லயன்ஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

1 More update

Next Story