இளையோர் 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
செல்ம்ஸ்போர்டு,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செல்ம்ஸ்போர்டில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.






