2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் - ஐ.சி.சி. அறிவிப்பு

128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாய்,
34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் டி20 வடிவில் (20 ஓவர்) நடத்தப்பட உள்ளது. இதையொட்டி லாஸ்ஏஞ்சல்சில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் தற்காலிமாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஒலிம்பிக்சில் நடைபெற உள்ள கிரிக்கெட்டில் 6 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
மேலும் ஐ.சி.சி. டி20 தரவரிசையில் இடம்பிடித்துள்ள முதல் 6 அணிகளுக்கு பதிலாக, ஒரு கண்டத்திற்கு ஒரு அணியை தேர்வு செய்ய முடிவு எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






