வரலாறு காணாத வினோதம்.. போட்டி தாமதமாக தொடங்க இப்படியும் ஒரு காரணமா..?


வரலாறு காணாத வினோதம்.. போட்டி தாமதமாக தொடங்க இப்படியும் ஒரு காரணமா..?
x

image courtesy:twitter/@englandcricket

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒருநாள் போட்டியின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விருரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்க உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. அது மழை காரணமாக அல்ல. வெஸ்ட் இண்டீஸ் அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் மைதானத்திற்கு வரவில்லை.

அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு என்னவாயிற்று? என்று தேடியபோதுதான் வினோதமான செய்தி வெளியானது. அதாவது போக்குவரத்து நெரிசலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேருந்து சிக்கிக்கொண்டது. அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியினரால் சரியான நேரத்திற்கு மைதானத்திற்கு வர முடியவில்லை என்பது தெரிய வந்தது.

ஆனால் போக்குவரத்து நெரிசலை முன்னரே அறிந்து கொண்ட இங்கிலாந்து அணியினர் தனித்தனியாக சைக்கிளில் மைதானத்திற்கு சரியான நேரத்தில் வந்துள்ளனர்.

கிரிக்கெட் வரலாற்றில் போக்குவரத்து நெரிசல் என்ற வினோதமான காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story