ஆஷஸ் தொடர்: முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

கான்பெர்ரா,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் இடம் பெறாததை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அப்போட், ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, பிரண்டன் டாக்கெட், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com