ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @ACCMedia1
சூப்பர் 4 சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. அதே உத்வேகத்தை தொடர இந்திய அணி முயற்சிக்கும்.
லீக் சுற்றில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.






