சாம்பியன்ஸ் டிராபி; இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்


சாம்பியன்ஸ் டிராபி; இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி வரும் 13ம் தேதி சென்சூரியனில் நடைபெற உள்ளது.

கெபேஹா,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 125 ரன் இலக்கை 19 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 13ம் தேதி சென்சூரியனில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அது இந்தியாவுக்கு இழப்பாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஒருவேளை இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபிக்கு வருண் சக்ரவர்த்தியை தேர்ந்தெடுக்கவில்லையெனில் அது அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கும். அவர் தற்போது அற்புதமான பவுலராக திரும்பி வந்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story