சாம்பியன்ஸ் டிராபி: ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தியை சேர்க்க காரணம் என்ன...? கம்பீர் விளக்கம்


சாம்பியன்ஸ் டிராபி: ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தியை சேர்க்க காரணம் என்ன...? கம்பீர் விளக்கம்
x
தினத்தந்தி 13 Feb 2025 12:29 PM (Updated: 13 Feb 2025 4:19 PM)
t-max-icont-min-icon

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட உத்தேச அணிகளை எல்லா நாடுகளும் ஏற்கனவே அறிவித்து இருந்தன. இந்த அணியில் மாற்றம் மற்றும் இறுதி செய்ய நேற்று முன்தினம் (பிப்.11) கடைசி நாளாகும்.

இதன்படி இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அவரது இடத்தை பிடித்துள்ளார். இது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருண் சக்ரவர்த்தியை சேர்க்க என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருண் சக்ரவர்த்தியை அணிக்குள் கொண்டுவர ஒரே காரணம்தான் உள்ளது. நமது அணியை பொறுத்தவரை மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் ஒரு பவுலர் நமக்கு தேவை. அந்த வகையில்தான் வருண் சக்கரவர்த்தியை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறோம். அவரால் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டை வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தி நிச்சயம் பந்து வீச்சில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அதனாலே அவரை அணியில் சேர்த்துள்ளோம். இருந்தாலும் அவர் பிளேயிங் லெவனில் நேரடியாக இடம்பெற்று விடுவார் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அந்த வகையிலேயே நாங்கள் வலுவான வீரர்களை சரியான இடத்திற்கு தேர்வு செய்வோம்" என்று கூறினார்.

1 More update

Next Story