டி20 கிரிக்கெட்டில் 4வது இந்திய வீரராக வரலாற்று சாதனை படைக்க உள்ள தோனி - விவரம்


டி20 கிரிக்கெட்டில் 4வது இந்திய வீரராக வரலாற்று சாதனை படைக்க உள்ள தோனி - விவரம்
x

image courtesy:PTI

ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது.

எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோத உள்ளது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் தோனி களம் இறங்குவதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 4வது இந்திய வீரராக வரலாற்று சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

அதாவது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் 400 போட்டிகளை விளையாடும் 4வது இந்திய வீரர் என்ற சாதனை பட்டியலில் தோனி இணைய உள்ளார். இந்த பட்டியலில் இந்தியா தரப்பில் ரோகித் சர்மா (456 போட்டிகள்) முதல் இடத்திலும், தினேஷ் கார்த்திக் (412 போட்டிகள்) 2வது இடத்திலும், விராட் கோலி (408 போட்டிகள்) 3வது இடத்திலும் உள்ளனர்.

தோனி 399* போட்டிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் கைரன் பொல்லார்டு (695 போட்டிகள்), டுவைன் பிராவோ (582 போட்டிகள்), ஷோயப் மாலிக் (557 போட்டிகள்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

1 More update

Next Story