ஐ.சி.சி.-ன் செப்டம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்.. யாரெல்லாம் தெரியுமா..?


ஐ.சி.சி.-ன் செப்டம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்.. யாரெல்லாம் தெரியுமா..?
x

சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ், மற்றும் பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பட்டியலை ஐ.சி.சி. சமீபத்தில் வெளியிட்டது.

இதில் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயை சேர்ந்த பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் செப்டம்பர் மாத சிறந்த வீரர் விருதை அபிஷேக் சர்மா வென்றுள்ளார்.

அதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, பாகிஸ்தானின் சித்ரா அமின், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் சிறந்த வீராங்கனையாக மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story